

சென்னை
கேரளாவில் பெய்த கனமழையில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் 22 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாலக்காடு கோட்டத்தில் பல்வேறு இடங் களில் கனமழை பெய்து தண்டவாளங்களில் வெள் ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு விரைவு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மங்களூர் - திருவனந்தபுரம் (16603), சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர்) - திருவனந்தபுரம் ஏசி விரைவு ரயில் (22207) மற்றும் மங்களூர் மெயில் (12601), மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344), காரைக்கால் - எர்ணாகுளம் (16187), திருவனந்தபுரம் - எர்ணாகுளம் (16343), கேஎஸ்ஆர் பெங்களூரு - கன்னியாகுமரி (16526), திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் (12624), ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் கேரளா விரைவு ரயில் (22640), சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் மெயில் (12695), எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06037), மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு (22637) உட்பட மொத்தம் 20 விரைவு ரயில்களின் நேற்றைய (9-ம் தேதி) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 ரயில்கள் பகுதி சேவை ரத்து
மேலும், ஏர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் (06015) இன்றைய சேவையும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் (06016) நாளைய சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. இதுதவிர, 14 விரைவு ரயில் களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.