

திருப்பூர்
அரசு கேபிள் டி.வி. செயல் பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் கே.எஸ்.பழனிசாமி முன்னி லையில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத் தலைவர் கே.ராதா கிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது:
பொதுமக்கள் குறைந்த கட்ட ணத்தில் நிறைந்த சேவையை பெறும் வகையில், 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் புத்துயிர் ஊட்டப்பட்டு, சந்தாதாரர்களுக்கு மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது.
இந்த சேவையை மேலும் விரிவு படுத்தும் வகையிலும், கேபிள் டி.வி. ஒளிபரப்பை மக்கள் துல்லிய மாக கண்டுகளிக்க ஏதுவாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று, 2017-ம் ஆண்டு டிஜிட்டல் ஒளிபரப்பு முறை தொடங்கப்பட் டது.
மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில், இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சுமார் 35.12 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ரூ.130 மற் றும் ஜிஎஸ்டி என, மாத சந்தா கட்டணமாக ரூ.155 நிர்ணயித்து வசூலிக்கப்படும்.
அரசு கேபிள் கட்டணம் பாதி யாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸாக இருந்து அதை தனியார் நிறுவனத்துக்கு மாற்றி இருந்தால், மீண்டும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸுக்கு மாற்ற வேண்டும். அரசு கேபிளாக இருந்து தனியார் கேபிளுக்கு மாற்றிய ஆபரேட்டர்கள் மீதும், நிறுவனத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேபிள் டிவி மறுசீரமைப்பு பணி கள் ஒரு மாதத்தில் முடியும். அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் களை யாரும் எடுக்கக்கூடாது. ஒரு மாதத்துக்குள் அதிக இணைப்பு களை ஏற்படுத்த வேண்டும். அரசு செட்டாப் பாக்ஸ்களை, கேபிள் ஆபரேட்டர்கள் பெற்றுக் கொண்டு தனியார் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அவை அரசு கேபிளாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, வருவாய் அலுவலர் சுகுமார், அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியர் ஜெய்சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.