

சென்னை
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல், தீய ணைப்புத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதில ளித்து முதல்வர் பழனிசாமி பேசிய தாவது:
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டு களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வரதட்சணை தொடர்பாக 165 உயிரி ழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு 55 வழக்குகள் மட் டுமே தாக்கலாகியுள்ளன. 2010-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டில் 66.7% வழக்குகள் குறைந்துள்ளன. சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத் தல் தொடர்பாக 2010-ம் ஆண்டு 1,464 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு 907 வழக்குகளாக குறைந்துள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மெட்ரோ நகரங்களில் சென்னை முதல் நகரமாகவும், 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் பெருநகரங்களில் கோவை முதல் நகரமாகவும் உள் ளன. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 690 கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. சென்னையில் 59,627 பொது கட்டிடங்கள் கண்டறியப் பட்டு, அவற்றில் 46,865 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. 50 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பின்னர், குற்றவாளிகள் குற்றச் செயலில் ஈடுபட தயங்குகின்றனர். அதை மீறி குற்றச்செயலில் ஈடுபடு வோர் போலீஸாரால் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப் படுகின்றனர்.
கடந்த 2017 முதல் 2019 ஜூன் வரை சங்கிலி பறிப்பு தொடர்பாக 1,190 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 1,066 வழக்குகளில் குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள னர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டு, புகார் தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. கடந்த ஆண்டில் ஜூன் வரை 258 சங்கிலி பறிப்பு வழக்குகள் பதி வாகியுள்ளன. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 135 வழக்குகளாக குறைந்துள்ளன. அதில் 109 வழக்கு களில் குற்றவாளிகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக் கள் அதிக அளவில் பொருத்தப்பட் டுள்ளதால், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு 71,431 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை யின் நடவடிக்கையால் 2017-ம் ஆண்டு 65,526 ஆகவும், 2018-ம் ஆண்டு 63,920 ஆகவும் விபத்துகள் குறைந்துள்ளன. 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2018-ம் ஆண்டில் 10.50 சதவீதம் விபத்துகள் குறைந் துள்ளன. விபத்து உயிரிழப்புகளை பொறுத்தவரை 2016-ம் ஆண்டு 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். இது, கடந்த ஆண்டில் 12,216 ஆக குறைந் துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் காவல்துறைக்கு ரூ.2,962 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அரசு, நிதியை தொடர்ந்து உயர்த்தி வந்து, இந்த ஆண்டு ரூ.8,084 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 முதல் ரூ.2,942 கோடி மதிப்பில் 551 காவல் நிலையங்கள், 18,648 குடியிருப்புகள், காவல் ஆணையர கங்கள், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகங்கள், பிற கட்டிடங்கள் என மொத்தம் 326 கட்டிடங்கள் கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளன. மேலும் 63 காவல் நிலையங்கள், 5,851 காவலர் குடியி ருப்புகள், 46 இதர அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,117 பள்ளி களில் மாணவர் காவல் படை திட் டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் படிப்படியாக மற்ற மாவட் டங்களிலும் செயல்படுத்தப்படும். கடந்த 8 ஆண்டுகளில் காவலர் முதல் காவல்துறை இயக்குநர் வரை பல் வேறு பதவிகளில் 64,519 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் எவ்வித தண் டனையும் இன்றி பணிபுரிந்துவரும் காவலர் முதல் தலைமைக் காவலர் வரையிலானவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச் சரின் காவலர் பதக்கம், தகுதி வாய்ந்த அனைவருக்கும் உடனடி யாக கிடைக்கும் வகையில், அப் பதக்கங்களின் எண்ணிக்கையை 1,500-ல் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அவசியத்தை கருதியும், அத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்றும் 2 கூடுதல் இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.