SIR | கோவை மாவட்டத்தில் இதுவரை 5.06 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம்!

SIR | கோவை மாவட்டத்தில் இதுவரை 5.06 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம்!
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் இன்றைய நிலவரப்படி, உயிரிழந்தவர்கள், இருமுறை பட்டியலில் இடம்பெற்றவர்கள் என 5.06 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 3,117 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒருபகுதியாக உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இருமுறை உள்ள வாக்காளர்கள், படிவங்களை பூர்த்தி செய்து வழங்காத வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறியது: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின் அண்மைய நிலவரப்படி, மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பேர், சூலூரில் 43,465, கவுண்டம்பாளையத்தில் 64,072, கோவை வடக்கில் 66,525, தொண்டாமுத்தூரில் 70,049, கோவை தெற்கில் 46,894, சிங்காநல்லூரில் 54,354, கிணத்துக்கடவில் 58,545, பொள்ளாச்சியில் 31,720, வால்பாறையில் 29,691 பேர் என மொத்தம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 394 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அதில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் மேட்டுப்பாளையம் தொகுதியில் 13,504, சூலூரில் 10,125, கவுண்டம்பாளையத்தில் 11,646, கோவை வடக்கில் 13,935, தொண்டாமுத்தூரில் 9,136, கோவை தெற்கில் 9,359, சிங்காநல்லூரில் 16,329, கிணத்துக்கடவில் 14,332, பொள்ளாச்சியில் 8,561, வால்பாறையில் 6,754 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 861 ஆக உள்ளது.

அதேபோல், முகவரி மாற்றம், தொடர்பு இல்லாதது, இருமுறை பட்டியலில் இடம்பெற்றவர்களின் எண்ணிக்கை மேட்டுப்பாளையத்தில் 27,575, சூலூரில் 33,340, கவுண்டம்பாளையத்தில் 52,426, கோவை வடக்கில் 52,590, தொண்டாமுத்தூர் 60,913, கோவை தெற்கு 37,355, சிங்காநல்லூர் 38,025, கிணத்துக்கடவு 44,213, பொள்ளாச்சி 23,159, வால்பாறை 22,937 என மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 533 ஆக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. திருத்தப்பணி முடிய இன்னும் கால அவகாசம் உள்ளதால், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

SIR | கோவை மாவட்டத்தில் இதுவரை 5.06 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம்!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை: மாநில தேர்தல் அதிகாரி விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in