

ஷேர் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் தனியார் நிறுவனம் இன்டர்நெட் இணைப்பு தர மறுப்பதாக ஒருவர் புகார் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனம் இதை மறுத்துள்ளது.
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் ம.குபேந்திரன். ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
எம்டிஎஸ் நிறுவனத்தின் இன்டர் நெட் சேவைகளை வழங்கிவரும் தனியார் நிறுவனம் சென்னை செம்பாக்கத்தில் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ளது. அங்கு ரூ.999 செலுத்தி எம்டிஎஸ் ‘டேட்டா கார்டு’ கருவியை கடந்த மே 18-ம் தேதி பெற்றேன். அத னுடன் 3 சாதனங்கள் இலவசமாக தரப்படும் என்றனர். ஆனால் 2 பொருட்கள்தான் தந்தனர்.
பிறகு, அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கொட்டிவாக்கத்தில் உள்ள என் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் இணைப்பு வழங்கப் படவில்லை. இதுகுறித்து கேட் டதற்கு, ‘ஷேர் ஆட்டோ ஓட்டுநரான உங்களால் மாதந்தோறும் முறையாக பணம் கட்ட முடியாது. எனவே, உங்களுக்கு இணைப்பு வழங்க முடியாது’ என்றனர். நான் பணம் கட்டாவிட்டால் இணைப்பை துண்டிக்கலாம். இணைப்பே தர மறுப்பது எப்படி நியாயமாகும். எனவே, வழக்கறிஞர் மூலமாக மே 24-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன்.
அதற்கு பதிலளித்த நிறுவனத் தினர், ‘இணைப்பு கேட்டு விண் ணப்பிக்க வாடிக்கையாளருக்கு உரிமை இருப்பதுபோல, அதை நிராகரிக்கும் உரிமை எங்களுக் கும் உண்டு’ என்று கூறினர். பிறகு எதற்காக ரூ.999-க்கு ‘டேட்டா கார்டு’ கருவியை விற்றார்கள்? இதுசம்பந்தமாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்த நிறுவனம் கடந்த 16-ம் தேதி அளித்துள்ள பதில் நோட்டீஸில், ‘‘ஆட்டோ ஓட்டுநர் என்பதால் நாங்கள் இணைப்பு தர மறுத்ததாக கூறுவது தவறு. எங்கள் தரப்பில் தவறு எதுவும் இல்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.