

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சந் தேகத்துக்கிடமான வகையில் 4 குழந்தைகளுடன் காத்திருந்த ஒரு பெண்ணிடம் ரயில்வே போலீஸார் விசாரித்துள்ளனர்.
அவர், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்றும், தனது குழந்தைகள் முத்துவேல்(8), துர்காதேவி(7), ஞானமுத்து(5), முத்துமாரி(3) ஆகியோருடன் மானாமதுரைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனினும், சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸார் 5 பேரையும் சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.
சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜ், ஜோதி ராஜ், லூர்துமேரி ஆகியோர் 5 பேரிடமும் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், குழந்தைகள் அழுக்கு படிந்த நிலையிலும், பைகளில் தட்டுகளுடனும் இருந்ததால், குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்திருக்கலாம் என தெரியவந்தது.
மேலும், மீனாட்சி அளித்த முகவரி யில் விசாரித்ததில், 4 குழந்தை களும் அவருடையதல்ல எனத் தெரிய வந்ததால், இந்த குழந்தைகள் அவரால் கடத்திவரப்பட்டிருக் கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்ய உள்ளதாக புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினர் தெரிவித்தனர்.