கருணாநிதி இல்ல நிகழ்ச்சியில் யாரோ ஒருவர் அழகிரி!

கருணாநிதி இல்ல நிகழ்ச்சியில் யாரோ ஒருவர் அழகிரி!
Updated on
1 min read

தனது தம்பி மகன் திருமண விழாவில் மு.க.அழகிரி யாரோ, எவரோ போல் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

தென் மண்டல திமுகவின் தூணாக இருந்த மு.க.அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதை தவிர்த்துவந்தார்.

இந்நிலையில், அண்மையில் அவரது தம்பி மு.க.தமிழரசு மகனின் திருமணம், வரவேற்பு என இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

ஆனால், அந்த விழாவில் வந்திருந்த உறவினர்களுடன் கலந்து கொள்ளாமல், விழா மேடைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை அங்கு வைக்கப்பட்டிருந்த திரையில் கண்டுள்ளார்.

முன்னதாக, திருமணத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்த மு.க.ஸ்டாலின், அழகிரியை அழைக்கும் பொறுப்பை மட்டும் தமிழரசிடமே விட்டுவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in