ஜூன் 16-ல் கும்பகோணத்தில் பாஜக செயற்குழு கூட்டம்

ஜூன் 16-ல் கும்பகோணத்தில் பாஜக செயற்குழு கூட்டம்
Updated on
1 min read

ஜூன் 16-ல் பாஜக செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தூய்மை இந்திய திட்ட விளக்க ஊர்தியை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதற்குப் பிறகு தமிழிசை பேசுகையில், '' ஆர்.கே.நகரில் தேர்தல் தேதி அறிவித்த பிறகு வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது.

காணொலி முதல்வரை விட நேரில் சந்திக்கும் முதல்வரையே மக்கள் விரும்புகின்றனர்.

பாஜக செயற்குழு கூட்டம் ஜூன் 16-ல் கும்பகோணத்தில் நடைபெறும்'' என்று பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in