தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்: வரும் 15-ம் தேதி முதல் அமல்

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்:  வரும் 15-ம் தேதி முதல் அமல்
Updated on
1 min read

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் முறை வரும் 15-ம் தேதி முதல் அமலாகிறது.

இது தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி பெட்டிகளுக்கு காலை 10 மணி முதலும் ஏ.சி. அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 மணி முதலும் தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். பயணத்திற்கு முதல் நாள் தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

அதோடு ஐ.ஆர்.சி.டி.சி. முகவர்கள் உட்பட அனைத்து முகவர்களும் சாதாரண டிக்கெட்டுகளை காலை 8 மணி முதல் 8.30 மணி வரை பதிவு செய்ய முடியாது. அதேபோல், ஏ.சி பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் 10.30 மணி வரையும் ஏ.சி அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 மணி முதல் 11.30 மணி வரையும் முகவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. இந்த தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் முறை வரும் 15-ம் தேதி முதல் அமலாகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in