

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே ஒரு நாய்களுக்கு ஓரளவு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்வித தடுப்பூசியும் போடாததால், நகரப் பகுதியைவிட, கிராமப்புறங்களில் நாய்க்கடி பாதிப்பு அதிகம் உள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டில் சேலத்தில் 28,166 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில், 22,113 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 9,229 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலியில் 23,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகம் முழுவதும் 4.68 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் நாய்க்கடி பாதிப்பால் 6.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 34 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டைவிட நாய்க்கடி பாதிப்பு குறைந்துள்ளது” என்றனர்.