

பழ.நெடுமாறன்
கடலூர்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர் மாணிக்கம் கிராமத்தில் தமிழர் விடுதலைப்படை தலைவர் தமிழரசனின் தாய் பதூசி அம்மாள் நினைவிடம் உள்ளது.
அங்கு நேற்றுமுன்தினம் தமிழர் நீதிக்கட்சித் தலைவர் சுப.இளவரசன் தலைமையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 46 பேர் அஞ்சலி செலுத்த வந்தனர். தகவலறிந்து சென்ற ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் அஞ்சலி செலுத்த அனுமதிமறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சுப.இளவரசன், பழ.நெடுமாறன் மற்றும் 6 பெண்கள் உள்ளிட்ட 46 பேரைக் கைது செய்தனர். பின்னர் இரவு அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். இதற்கு தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.