திருத்தணி அருகே அரசு பஸ் கவிழ்ந்து இளம்பெண் பலி; 17 பேர் படுகாயம்

திருத்தணி அருகே அரசு பஸ் கவிழ்ந்து இளம்பெண் பலி; 17 பேர் படுகாயம்
Updated on
1 min read

திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசு பஸ், நேற்று அதிகாலை திருத்தணி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். பஸ்ஸின் ஓட்டுநர் உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகத்தின் திருத்தணி பணி மனையைச் சேர்ந்த பஸ், நேற்று முன் தினம் நள்ளிரவு திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்ஸை திருத்தணியைச் சேர்ந்த கன்னி யப்பன் (50) என்பவர் இயக்கினார். சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு, அந்த பஸ்ஸில் வீடு திரும் பிக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3 மணியள வில், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே தரணிவராகபுரம் பகுதி யில் மிக வேகமாக வந்துக் கொண்டி ருந்த பஸ், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பஸ்ஸில் ஓட்டுநர் இருக்கையின் பின்புற இருக்கையில் அமர்ந் திருந்த, திருமுல்லைவாயில் மூர்த்தி நகரைச் சேர்ந்த விஜயசாந்தி (25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டுநர் கன்னியப்பன், விஜய சாந்தியின் தாய் பென்சிலம்மா (50) உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த திருத்தணி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்து வமனையில் சேர்த்தனர். இதில், 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஓட்டுநர் கன்னியப்பன் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் உயிரிழந்த விஜயசாந்தி, ஆசிரியர் பயிற்சி முடித்தவர். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் சற்று கண் அயர்ந்ததால் விபத்து நிகழ்ந்ததாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து, திருத்தணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in