

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கோடை மழையால், குன்னூர் ரேலியா அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது.
நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் இருந்த குன்னூர் மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது, அப்பகுதி மக்களை ஆறுதலடையச் செய்துள்ளது.
இந்நிலையில், குன்னூர் நகரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணைக்கான நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பிவிட்டதால், உபரி நீர் வெளியேறி வருகிறது. கடல்போல் காட்சியளிக்கும் அணையைக் காண, அங்கு சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர்.
அணைப் பகுதியில், உணவுக் கழிவுகளை சுற்றுலாப் பயணிகள் வீசி செல்வதால், அப்பகுதி அசுத்தமடைந்து வருகிறது. சிலர், மது அருந்திவிட்டு பாட்டில், டம்ளர்களை விட்டுச் செல்வதால், அவை அணை நீரில் கலக்கின்றன.
பூங்காவுக்கு பாதுகாப்பு
தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், பூங்காக்களில் மலர்ச் செடிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உதகை தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் மற்றும் காட்டேரி பூங்காக் களில் மலர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, செடிகளுக்கு மேல் பிளாஸ் டிக் போர்வைகளை மூடி, தோட் டக்கலைத் துறை ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.