உயர் நீதிமன்ற வளாகத்தில் தீ

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீ
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற வளாகத் தில் பெண் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் உள்ளது. பூட்டப்பட் டிருந்த இந்த அலுவலகத்துக்குள் இருந்து நேற்று காலையில் புகை வெளியேறியது. அருகே இருந்த சிலர் இதைப் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி சிவகங் கரன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ வேறு இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீப்பிடித்த இடத்தின் அருகிலேயே குழந்தை கள் காப்பக அறையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்கசிவு காரணமாக தீப்பிடித் ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். உயர் நீதிமன்ற போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in