

பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் முதன் முறையாக 586 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் 586 பேர் 100-க்கு 100 பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இதில், தமிழ் மொழிப்பாடத்தில் 11 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 5 பேர் முதலிடமும், நான்கு பேர் இரண்டாவது இடமும், இரண்டு பேர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். | அதன் விவரம்:> பத்தாம் வகுப்பு பாட வாரியாக மாணவர்கள் குவித்த சதங்கள் |
மற்ற பாடங்களில் 100-க்கு 100:
கணிதம் - 27,134 பேர்
அறிவியல் - 1,15,853 பேர்
சமூக அறிவியல் - 51,629 பேர்
ஆங்கிலம் - 644 பேர்