8-வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

8-வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
Updated on
1 min read

தரமணியில் 8-வது மாடியில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில் 8 தளங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வட இந்திய இளைஞர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நூர்லா (23) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகல் 8-வது தளத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அங்கிருந்து கீழே விழுந்தார்.

அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலையில் நூர்லா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தரமணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in