

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திரு வண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், விழுப்புரம், திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சராசரி நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக 15.81 மீட்டர் ஆழம் வரை நிலத்தடி நீர்மட்டம் இறங்கியுள்ளது.
அதே நேரம், தென் மாவட்டங்களில் கடந்த மாதம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக் குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், ஈரோடு, தேனி உள்ளிட்ட 22 மாவட் டங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரலில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந் துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சராசரியாக 15.77 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் இந்த ஆண்டு 11.54 மீட்டர் ஆழத்திலேயே காணப்பட்டது. திருநெல்வேலியில் 2.83 மீட்டர், திண்டுக்கலில் 2.32 மீட்டர், சென்னையில் 0.66 மீட்டர் என்ற அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த மாவட்டங்களில்கூட மார்ச் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றா கவே உயர்ந்திருந்தது. வெயில் அதிகரிப்பால், ஏப்ரலில் சற்று குறைந் துள்ளது.