

பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிக் கவும், பாதுகாப்பு நோக்கத்துக் காகவும் கண்காணிப்பு கேமராக் களை பொருத்துமாறு அரசு உத்தரவிட்டதை அடுத்து, காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத் தும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, முதற்கட்ட மாக, அச்சிறுப்பாக்கம் பேரூ ராட்சி அலுவலகத்தில் கண் காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட பேரூராட்சிகள் இணை இயக்குநர் செல்வம் கூறிய தாவது: அந்தந்த பேரூராட்சி களின் பொதுநிதியின் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கேமரா பொருத்தும் பணி முடிந்தது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பெருங்களத்தூர் பேரூ ராட்சிகளில் பணி நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.