கர்நாடகாவில் தொழிலாளர்கள் மோதல்: 3 பெண்கள் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை - பலியானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

கர்நாடகாவில் தொழிலாளர்கள் மோதல்: 3 பெண்கள் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை - பலியானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் தொழிலாளர் களுக்குள் ஏற்பட்ட மோதலில், தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணிக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். இவர்களை அழைத்துச் சென்ற கரும்பு வெட்டும் தரகர் ராஜேந்திரன், அங்குள்ள ஹரளே கிராமத்தில் உள்ள சேகர் என்பவரின் கரும்பு தோட்டத்தில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதி காலை சேகர் தனது கரும்பு தோட் டத்துக்கு சென்றபோது அங்கிருந்த 2 குடிசைகளில் தரகர் ராஜேந்திரன் (35), காசி (40) அவரது மனைவி சிவம்மா (35) மற்றும் ராஜம்மா (35) இவரது மகள் ரோஜா (11) ஆகியோர் வெட்டப்பட்டு இறந்து கிடந்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொள்ளேகால் போலீஸார், இறந்தவர்களின் சடலங்ககளைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் சாம்ராஜ்நகர் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துராஜு சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து முத்துராஜு கூறும்போது, “இறந்தவர்கள் 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள். கரும்பு வெட்டும் தரகர் ராஜேந்திரன், தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக கூலியை பிரிப்பதில் ராஜேந்திரனுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த 15 தொழிலாளர்கள் ராஜேந்திரன் உள்ளிட்ட மற்றவர்களை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தொடர் புடைய அனைவரும் தலைமறை வாகி இருப்பதால் தெளிவான காரணம் தெரியவில்லை. ஆனால் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டிருக்கும் விதத்தை கவனிக்கும்போது இதற்கு பணப் பிரச்சினை மட்டுமல்லாமல் வேறு சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம் என சந்தேகிக் கிறோம். இந்த சம்பவம் தொடர் பாக விசாரிப்பதற்கு 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் கர் நாடகத்திலும், தமிழகத்திலும் விசா ரணையை தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

அந்தியூர் அருகேயுள்ள பர்கூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதால் அங்கு சோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் சம்ராஜ்நகருக்கு சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in