பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்: இதுவரை 65 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்: இதுவரை 65 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்
Updated on
1 min read

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை 65 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். நேற்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 13 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

வருகிற 27-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் கடைசி நாளான 29-ந் தேதி தேதி வரையும் விண்ணப்பம் வழங்கப்படும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்ற விவரத்தை இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) தெரிந்துகொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in