ஆண்டிபட்டி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 41 பேர் படுகாயம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த  தனியார் பேருந்து.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த தனியார் பேருந்து.

Updated on
1 min read

ஆண்டிபட்டி: தேனி மாவட்​டம் போடியி​லிருந்து நேற்று காலை மதுரை நோக்கி தனி​யார் பேருந்து 50-க் கும் மேற்​பட்ட பயணி​களு​டன் சென்று கொண்​டிருந்​தது. பகல் 12 மணி​யள​வில் ஆண்டிபட்டியைக் கடந்து டி.பொம்​மி​நாயக்​கன்​பட்டி விலக்கு அருகே பேருந்து சென்​றது.

அப்​போது, திரு​மங்​கலத்​தில் திருமண நிகழ்ச்சியை முடித்​து​விட்டு வடு​கபட்டி நோக்கி வந்து கொண்​டிருந்த கார் மீது தனி​யார் பேருந்து நேருக்கு நேர் மோதி​யது. இதில் பேருந்து திசை​மாறி அரு​கில் உள்ள மரத்​தில் மோதி தலைகுப்​புறக் கவிழ்ந்​தது.

இந்த விபத்​தில் பேருந்​தின் பெரும்​பகுதி சேதமடைந்த நிலையில், உள்ளே இருந்த பயணி​கள் அலறினர். அரு​கில் இருந்​தவர்​கள் கண்​ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.

காயமடைந்த பேருந்து பயணி​கள் 37 பேர், காரில் வந்த 4 பேர் மீட்​கப்​பட்​டு, தேனி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

பலத்த காயமடைந்த அல்லி நகரம் அசோக்​கு​மார் (40), விருதுநகர் கணேஷ்​ராம் (49), பண்​ணைப்​பட்டி போஸ் (30), மேல்​மங்​கலம் ராமையா (79), ஸ்ரீரங்​கபுரம் கணேசன் (62), உத்​தம​பாளை​யம் சுபாஷினி (26) உள்​ளிட்ட 10-க்​கும் மேற்​பட்​டோர் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

<div class="paragraphs"><p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த  தனியார் பேருந்து. </p></div>
நீலகிரி மலை ரயில்​ கட்டணம்​ இன்று முதல்​ 5% உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in