பதவி விலகிய விவகாரம்: 4 முன்னாள் எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரிடம் விளக்கம்

ஜேசிடி பிரபாகர்

ஜேசிடி பிரபாகர்

Updated on
1 min read

சென்னை: ப​த​வியை ராஜி​னாமா செய்து தவெக​வில் இணைந்த முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் 2-வது முறை​யாக நேரில் ஆஜராகி விளக்​கம் அளித்​தனர்.

கடந்த மே 13-ம் தேதி சட்டப் பேரவையில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் அதிமுக கொறாடா உத்​தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இந்​நிலை​யில் இரண்​டாக பிரிந்​திருந்த அதி​முக பல்​வேறு கட்ட ஆலோ​சனை​களுக்கு பின் மீண்​டும் ஒன்​றிணைந்​தது.

அதைத்​தொடர்ந்து அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை, வேலுமணி அணி​யினர் சந்​தித்து கொறா​டா​வின் உத்​தரவை மீறியதற்​காக வருத்​தம் தெரி​வித்து முறைப்​படி மன்​னிப்பு கடிதம் வழங்​கினர். இதையேற்று தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்த 21 அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் மீது நடவடிக்கை கைவிடப்​படு​வ​தாக என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் அறி​வித்​தார்.

அதே​நேரம் பதவியை ராஜி​னாமா செய்து தவெக​வில் சேர்ந்த 4 எம்​எல்​ஏக்​கள் (ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பை​யா, சத்​தி​ய​பா​மா, மரகதம் குமர​வேல்) மீதான தகு​திநீக்க மனுக்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என்​றும் அவர் தெரி​வித்​திருந்​தார். அதன்​படி அந்த 4 பேரிடம் விளக்​கம் கேட்டு கடந்த ஜூன் 9-ல் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டது. அவர்கள் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்​கம் அளித்​தனர். அதில் சில விளக்​கங்​களை சட்​டப்​பேர​வைத் தலை​வர் கேட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் முன்​னாள் எம்​எல்​ஏ.க்​கள் ஜெயக்​கு​மார், சத்​தி​ய​பா​மா, மரகதம் குமர​வேல் ஆகியோர் சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் நேற்று நேரில் ஆஜராகி விளக்​கம் அளித்​தனர். அதே​போல், இசக்கி சுப்​பையா கடந்​த​வாரமே தனது விளக்​கத்தை கூறினார். இதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்​கைகளை பேர​வைத் தலை​வர் மேற்​கொள்​வார் என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>ஜேசிடி பிரபாகர்</p></div>
சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 28 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in