பாம்பனில் கரை ஒதுங்கிய மர்மப் படகு: போலீஸ் விசாரணை

பாம்பனில் கரை ஒதுங்கிய மர்மப் படகு: போலீஸ் விசாரணை
Updated on
1 min read

பாம்பனில் கரை ஒதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த பைபர் படகை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

கடல் மார்க்கமாக தீவிர வாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட் டுள்ளதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பன் தெற்கு கண்ணுப்பாடு கடலோரப் பகுதியில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் நேற்ற காலை தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து 25 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு, அதில் இருந்த பெட்ரோல், மண்ணெண்ணெய் கேன்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

படகில் இன்ஜின் இல்லாததால் அது கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என தொடர்ந்து தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in