கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் மறியல்: 500 பேர் கைது

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் மறியல்: 500 பேர் கைது
Updated on
1 min read

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணாசிலை எதிரே சாலை மறியல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி அரசு பணியாளர்களாக மாற்றவேண்டும்,காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in