

சென்னை: தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 மண்டல செயலாளர்களை கட்சியின் தலைவர் திருமாவளவன் நியமித்துள்ளார்.
அத்துடன், 2 சட்டப் பேரவை தொகுதிக்கு ஒரு துணை செயலாளர் வீதம் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் 3 துணை மண்டல செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
அதன்படி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மண்டல செயலாளராக தளபதி சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல துணை செயலாளர்களாக மு.ஏகாம்பரம் (கும்மிடிப்பூண்டி, பொன்னேரி), ஆவடி ராமதாஸ் (மாதவரம், ஆவடி), செஞ்சி செல்வம் (பூந்தமல்லி, திருவள்ளூர்) ஆகியோரும் வட
சென்னை தொகுதி மண்டல செயலாளராக ச.அம்பேத்வளவனும், துணை செயலாளர்களாக நீலமேகவளவன் (திருவொற்றியூர், ராயபுரம்), புரசை அன்பழகன் (திருவிக நகர், கொளத்தூர்), எஸ்.எம்.முனீர் (ஆர்.கே.நகர், பெரம்பூர்) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்சென்னை தொகுதி மண்டல செயலாளராக ரூதர் கார்த்திக், துணை செயலாளர்களாக கதிர் ராவணன் (விருகம்பாக்கம், தி.நகர்), மந்தைவெளி அசோக் (மயிலாப்பூர், சைதாப்பேட்டை), பள்ளிக்கரணை வீரவேல் (வேளச்சேரி சோழிங்க நல்லூர்) ஆகியோரும்.
மத்திய சென்னை தொகுதி மண்டல செயலாளராக ரா.செல்வம், துணை செயலாளர்களாக மு.செல்வம் (துறைமுகம், எழும்பூர்), சி.கே.அர்ஜூன் (திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு), ராவண செந்தில் (அண்ணாநகர், வில்லிவாக்கம்) ஆகியோரும், திருப்பெரும்புதூர் தொகுதி மண்டல செயலாளராக கு.கதிர்வேல், துணை செயலாளர்களாக தே.ரூபஸ் (அம்பத்தூர், மதுரவாயல்), கென்னடி (ஆலந்தூர், திருப்பெரும்புதூர்), தேவ அருள்பிரகாசம் (பல்லாவரம், தாம்பரம்) ஆகியோரும், காஞ்சிபுரம் தொகுதி மண்டல செயலாளராக ரா.தமிழரசன், துணை செயலாளர்களாக மதிஆதவன் (காஞ்சிபுரம், உத்திரமேரூர்), பொன்னிவளவன் (மதுராந்தகம், செய்யூர்), நா.இளையவன் (செங்கல்பட்டு, திருப்போரூர்) ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.