ஜவ்வாது, சித்தேரி மலைகளை சேர்ந்த 3000 பழங்குடியினர் எங்கே போனார்கள்?

ஜவ்வாது, சித்தேரி மலைகளை சேர்ந்த 3000 பழங்குடியினர் எங்கே போனார்கள்?
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மன்னர் அபேசிங் அந்தப்புரம் 1730-ல் கட்டுவதற்காக கெஜரலி கிராமத்திலிருந்த வன்னி மரங்களை ஆட்களைக் கொண்டு வெட்டி வீழ்த்தினார். அப்போது அமிருதாதேவி என்பவர் தலைமையில் திரண்ட பழங்குடி பெண்கள், உயிரே போனாலும் மரங்களை வெட்ட விடமாட்டோம் என்று தடுத்தார்கள். அவர்களை ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தது அரச படை. இதில் அமிருதா தேவி அவரது குழந்தைகள் உள்பட 363 பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர். அன்று மரங் களுக்காக உயிரையே கொடுத்த பழங்குடி மக்களை இப்போது, மரங்களை வெட்ட வைத்து உயிரைப் பறித்திருக்கிறார்கள் மரக் கடத்தல் மாஃபியாக்கள்.

செம்மரங்களை அடையாளம் கண்டு அவைகளை வெட்டி மலைகளில் எத்தனை கிலோ மீட்டர் தூரமானலும் தலைத் தூக்காய் தூக்கிச் செல்வதில் பழங்குடிகள் கைதேர்ந்தவர்கள். இவர்களின் இந்தத் திறமையை மரக் கடத்தல் மாஃபி யாக்கள் தங்க ளுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம், மரக் கடத்தலின் பின்னணியில் போலீஸ், வனத்துறை, சில உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பெரிய கூட்டணியே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பழைய வட ஆற்காடு மாவட்டம் மிக மிக வறட்சியான பகுதி என்பதால் இங்குள்ள ஆதி வாசிகளில் பெரும்பகுதியினர் கர்நாடக காபி தோட் டங்களிலும் ஆந்திர மரக் கடத்தல் மாஃபியாக்களி டமும் நவீன கொத்தடிமைகளாக சிறைபட்டுக் கிடக் கிறார்கள்.

ஜவ்வாது மலையில் உள்ள 11 பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட 240 கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு பஞ் சாயத்திலும் ’வாழ்வாதார கமிட்டி’ என்றொரு அமைப்பு இருக்கிறது. ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்டவர்கள் பிழைப்புக்காக இடம் பெயரும்போது அது பற்றிய பதிவுகள் வாழ்வாதார கமிட்டியில் இருக்க வேண்டும். இப்படி ஜவ்வாது, சித்தேரி மலை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3000 பழங்குடிகள் இப்போது தங்களின் பூர்வீக வசிப்பிடத்தில் இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்ற விவரமும் வாழ்வாதார கமிட்டி பதிவேடுகளில் இல்லை.

தமிழகத்திலிருந்து செம்மரங்களை வெட்ட வரும் பழங்குடிகளை மிரட்ட ஆந்திர போலீஸும் வனத் துறையும் பலவழிகளில் மெனக்கெட்ட நிலையில், இவர்கள் கூட்டம் கூட்டமாக எங்கே போகிறார்கள் என்ற விவரத்தை தமிழக உளவுத்துறை கண் காணிக்கத் தவறிவிட்டது.

அப்படிக் கண்டுபிடித்து உஷார்படுத்தி இருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in