

மார்த்தாண்டம் அருகிலுள்ள பாலப்பள்ளியைச் சேர்ந்த ஜெப டானி, ஏமன் நாட்டில் உள்ள அல்செய்டி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த 11 பேர் உட்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 மருத்துவ பணியாளர் கள் ஏமனிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜெப டானி. நம்மிடம் பேசிய தாவது: ஏமனில் ஒரு மாதம் முன்பு சண்டை தீவிரமாகி, எங்களால் மருத்துவமனையை விட்டு வெளி யில் செல்ல முடியவில்லை. இர வும் பகலும் துப்பாக்கிச் சத்தமும் குண்டு முழக்கமும் கேட்டுக் கொண்டே இருந்தது. குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை.
இந்திய தூதரகத்தின் உதவி யோடு அங்கிருந்து தப்பித்தோம். ஆனாலும் அங்கிருந்து துறை முகத்துக்கு உடனடியாக வர முடிய வில்லை. துறைமுகத்துக்கு காரில் வந்தபோது கடும் சண்டை நடந்ததால் பாதி வழியிலேயே திரும்பிவிட்டோம்.
கார் டிரைவர் ஏமனைச் சேர்ந்தவர் என்பதால், ‘இவர்கள் எல்லாம் இந்தியர்கள்’ என்று சொல்லி எங்களை காப்பாற்றி னார். வழியில் சாலை முழுவதும் சடலங்கள். நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு சடலங்களின் மீது காரை ஏற்றித்தான் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். இந்நிலையில், திங்கள்கிழமை அல்செய்டி மருத்துவமனை குண்டுவீசி தகர்க்கப்பட்டதாக தகவல் அறிந்தோம்.
ஏமனில் எஞ்சியிருக்கும் இந்தியர்களையும் இந்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் ஜெப டானி.