

தெலங்கானா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் இருப்பதையடுத்து தமிழகத் திற்குள் நுழையும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக் கப்படுகிறது. மேலும், முட்டை, கோழி லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கி 20 ஆயிரம் கோழிகள் இறந்தன. பறவைக்காய்ச்சல் நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ள குருவிநாயனப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் இங்கு கிருமி நாசினி தெளிக்கப் படுகிறது. அதன்பின்னரே அந்த வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மருத்துவர் வேடியப்பன் தலைமையிலான குழுவினர் நேற்று முதல் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தேவராஜன் கூறியதாவது:
தெலங்கானாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல், தமிழ கத்தில் பரவாமல் தடுக்க தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது குருவிநாயனப் பள்ளியில் புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கால்நடை மருத்துவர், ஆய்வாளர்கள், உதவியா ளர்கள் கொண்ட குழுவினர், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தெலங் கானா மாநிலத்திலிருந்து கோழிகள், முட்டைகள், கோழி களுக்கான தீவனம் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. 8 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உயிரிழப்பு உள்ளதா என்பதை கண்காணித்து வருகிறோம்.
மேலும், வனப் பகுதியில் பறவைகள் திடீர் உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு வனத்துறை யினரிடம் தெரிவித்து உள்ளோம். ஏற்கெனவே கர்நாடக மாநிலம் எல்லையில் ஓசூர் ஜூஜூவாடியில் அமைக்கப் பட்டுள்ள சோதனைச் சாவடியிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெலங்கானா, ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் குறையும் வரையில் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு நீடிக்கும் என்றார்.