

நாகூர் கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் வைபவத்துக்காக தமிழக அரசு 40 கிலோ சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்குகிறது.
மார்ச் 31 நடைபெறவுள்ள கந்தூரி விழாவின் சந்தனம் பூசும் வைபவத்துக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5,96,258 மதிப் பிலான 40 கிலோ சந்தனக் கட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான உத்தரவு தமிழக அரசின் முதன்மை வனப் பாதுகாவலரால் பிறப்பிக்கப்பட்டு, அதன் நகல் நாகூர் தர்கா நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் ஹாஜி ஷேக் ஹசன் சாகிபின் வேண்டு கோளின்படி, நாகூர் கந்தூரிக்கு தமிழக அரசு சந்தனக் கட்டை களை இலவசமாக வழங்கி வருகிறது.