துபாயில் இருந்து 2-வது விமானத்தில் 364 பேர் வருகை

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரால் துபாயில் சிக்கி தவித்த பயணிகள் நேற்று காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பத்திரமாக சென்னை திரும்பிய பயணிகளை கட்டியணைத்து வரவேற்ற உறவினர்கள்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரால் துபாயில் சிக்கி தவித்த பயணிகள் நேற்று காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பத்திரமாக சென்னை திரும்பிய பயணிகளை கட்டியணைத்து வரவேற்ற உறவினர்கள்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

Updated on
2 min read

சென்னை: துபாயில் இருந்து புறப்​பட்ட 2-வது விமானத்​தில் 364 பயணி​கள் சென்னை வந்து சேர்ந்​தனர். துபாயில் பொது​மக்​களுக்கு எந்த பாதிப்​பும் இல்லை என்று பயணி​கள் தெரி​வித்​தனர்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையே போர் கடந்த 28-ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் ஐக்​கிய அரபு, வளை​குடா மற்றும் மத்​திய கிழக்கு நாடு​கள் இடையே விமான சேவை​கள் முழு​வது​மாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால், சென்​னைக்​கும் துபாய், பக்​ரைன், அபு​தாபி,குவைத், மஸ்​கட் போன்ற நாடுக​ளில் இடையே விமான இயக்​கம் துண்​டிக்​கப்​பட்​டது. கடந்த 2-ம் தேதி அதி​காலை எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் விமானம் மட்​டும் துபாயில் இருந்து 217 பயணி​களு​டன் சென்​னைக்கு வந்​தது.

அதன்​பின்பு எந்த விமான​மும், துபாய் உள்​ளிட்ட நாடு​களில் இருந்து சென்​னைக்கு வரவில்​லை. இந்​நிலை​யில், நேற்று காலை துபாயில் இருந்து 2-வது எமிரேட்ஸ் விமானம் 364 பயணி​களு​டன் சென்​னைக்கு வந்து சேர்ந்​தது.

விமான நிலை​யத்​தில் காத்​திருந்த குடும்​பத்​தினர், உறவினர்​கள் அவர்​களை கண்​ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்​றனர். விமானத்​தில் வந்த கடலூரை சேர்ந்த ஜனனி கூறுகை​யில், துபாயில் குண்​டு​வெடிப்பு சத்​தம், ராணுவ போர் விமானங்​கள் பறக்​கும் சத்​தம் ஓயாமல் கேட்டு கொண்​டு​தான் இருக்​கிறது.

தாக்​குதல்​கள் அனைத்​தும் அமெரிக்​கா, இஸ்​ரேல் நாடு​களை சேர்ந்த கட்​டிடங்​கள், அவர்​களு​டைய ராணுவ தளங்​களை மட்​டுமே குறி​வைத்து நடத்​தப்​படு​கின்​றன. பொது​மக்​களுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்லை என்​றார்.

சேலத்தை சேர்ந்த சரவணகு​மார், அமெரிக்​கா​வில் இருந்து துபாய் வழி​யாக சொந்த ஊர் திரும்ப விமானத்​தில் பயணம் செய்​தோம். ஆனால், 4 நாட்​களாக துபாயில் சிக்​கிய பிறகு சென்னை வந்​தோம். துபாயில் ராணுவ தாக்​குதல்​கள் நடந்து கொண்டு இருந்​தா​லும், பொது​மக்​களுக்கு எந்த பாதிப்​பும் இல்லை என்​றார்.

சென்​னையை சேர்ந்த பீட்​டர் தெரிவிக்​கை​யில், தமிழகத்​தில் டிவி​களில் வரும் செய்​தி​களில் கூறு​வது போல், துபாயில் பெரிய அளவில் பதட்​டம் இல்​லை. அங்கு மக்​கள் தங்​கள் அன்​றாட பணி​களில் வழக்​கம் போல் ஈடு​படு​கின்​றனர்.

திரும்பி வர எங்​களுக்கு அனைத்து ஏற்​பாடு​களை​யும், துபாய் விமான நிலை​யத்​தில் அதி​காரி​கள் செய்து கொடுத்​தனர் என்றார்.

சென்​னையை சேர்ந்த தர்​ஷினி கூறுகை​யில், குண்டு வெடிக்​கும் சத்​தங்​கள், ராணுவ விமானங்​கள் பறக்​கும் சத்​தங்​கள் தொடர்ந்து கேட்​டது, கொஞ்​சம் பயமாக இருந்​தது. ராணுவ முகாம்​கள் இருக்​கும் பகு​தி​களில் தான் அதி​க​மான பதட்​டம் நில​வு​கிறது. ஆனால் பொது மக்​களுக்கு எந்த பாதிப்​பும் இல்​லை என்றார்.

<div class="paragraphs"><p>ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரால் துபாயில் சிக்கி தவித்த பயணிகள் நேற்று காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பத்திரமாக சென்னை திரும்பிய பயணிகளை கட்டியணைத்து வரவேற்ற உறவினர்கள்.படங்கள்: எம்.முத்துகணேஷ்</p></div>
திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலின் இந்தி பெயர் நீக்கம்: திமுக போராட்டத்தின் எதிரொலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in