உர விலை உயர்வுக்கு மு.க.அழகிரியே காரணம்: கூட்டுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

உர விலை உயர்வுக்கு மு.க.அழகிரியே காரணம்:  கூட்டுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

உரங்களின் விலை இந்த அளவுக்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு முன்னாள் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரிதான் காரணம் என்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, “தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பட்டுப்போய் வருகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், டிஏபி உள்ளிட்ட உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது” என்றார்.

அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பதிலளித்துப் பேசும்போது கூறியதாவது:

உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது என்று நாங்களும் சொல்கிறோம். இந்த அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்துள்ளதற்கு முன்னாள் மத்திய ரசாயனத்துறை அமைச்சரான மு.க.அழகிரிதான் காரணம். மத்திய அரசு உரங்களின் மீதான மானியத்தை குறைத்தபோது கேபினட் அமைச்சரான மு.க.அழகிரி அதற்கு கையெழுத்துப் போட்டார். எனவே, உரங்களின் விலை உயர்வுக்கு அவரும், மத்திய அரசில் அங்கம் வகித்த நீங்களும்தான் (திமுக) காரணம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜு, கார்த்திக் தொண்டமான், எம்.சக்தி (அதிமுக), கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரும் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in