சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்புடைய 35 நடைபாதை டெண்டர்கள் ரத்து: 12 மாநகராட்சி தூய்மைப் பணி டெண்டர்களும் ரத்து

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்புடைய 35 நடைபாதை டெண்டர்கள் ரத்து: 12 மாநகராட்சி தூய்மைப் பணி டெண்டர்களும் ரத்து
Updated on
1 min read

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் ரூ.284 கோடி மதிப்​பிலான 35 நடை​பாதை டெண்​டர்​களை தமிழக அரசு ரத்து செய்​துள்​ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி​யில் 35 நடை​பாதைகளை சீரமைக்​கும் டெண்டர்கள் கடந்த பிப்​ர​வரி மாதம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தன.

அதன் பிறகு தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​த​தால், ஒப்​பந்​த​தா​ரருக்கு பணி ஆணை வழங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசு, இந்த டெண்​டர்​களைரத்து செய்​துள்​ளது.

திட்​டச் செலவு செயற்​கை​யாக அதி​கரிக்​கப்​பட்​டது, சில ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு சாதக​மாக டெண்டர் விதி​கள் உரு​வாக்​கப்​பட்​டது போன்ற காரணங்​களால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்​படும் என்​ப​தால், இந்த டெண்டர் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

திமுக ஆட்​சி​யில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கக் கூடாது. ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி தூய்​மைப் பணி​யாளர்​கள் தொடர் போராட்​டங்​களை நடத்தி வந்​தனர்.

அப்​போது அவர்​களுக்கு தவெக தலை​வர் விஜய் ஆதர​வளித்​திருந்​தார். இந்​நிலை​யில் தவெக அரசு பொறுப்​பேற்ற பிறகு, ஆவடி, ஓசூர், தாம்​பரம், வேலூர், கோவை ஈரோடு, சேலம், திருப்​பூர், மதுரை, தூத்​துக்​குடி, திருச்​சி, திருநெல்​வேலி ஆகிய 12 மாநக​ராட்​சிகளில் திடக் ​கழிவு அகற்​றம் மற்​றும் கொண்டு செல்​லும் பணி​களை அரசு மற்​றும் தனி​யார் பங்​களிப்​புடன் மேற்​கொள்​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராய்​வதற்​காக 3 தொகுப்​புகளாக சுமார் ரூ.4 கோடி​யில் டெண்​டர் கோரப்​பட்​டது.

இதற்கு கம்​யூனிஸ்ட் கட்சி தலை​வர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். சமூக வலைத்​தளங்​களில், விஜய், தூய்​மைப் பணி​யாளர்​களுக்​காக செய்த பதிவை டேக் செய்​து, தூய்​மைப் பணியை தனி​யாருக்கு வழங்க எதிர்ப்பு தெரி​வித்து பொது​மக்​கள் பதி​விட்டு வந்​தனர். இந்​நிலை​யில் இந்த டெண்​டரை தமிழக அரசு ரத்​து செய்​துள்​ளது.

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்புடைய 35 நடைபாதை டெண்டர்கள் ரத்து: 12 மாநகராட்சி தூய்மைப் பணி டெண்டர்களும் ரத்து
பூந்தமல்லியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: நண்பர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in