தருமபுரியில் கள்ளத்துப்பாக்கி, மான்கொம்பு பறிமுதல்

தருமபுரியில் கள்ளத்துப்பாக்கி, மான்கொம்பு பறிமுதல்
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கள்ளத்துப்பாக்கி மற்றும் மான்கொம்பு வைத்திருந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பென்னாகரம் அடுத்த நடேசன்காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கோவிந்தராஜ்(25). இவர் வீட்டில் கள்ளத் துப்பாக்கி மற்றும் மான் கொம்பு வைத்திருப்பதாக பென்னாகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து காவல்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது கோவிந்த ராஜ் வீட்டில் ஒரு கள்ளத்துப்பாக்கி மற்றும் ஒரு ஜோடி மான்கொம்பு இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவான கோவிந்த ராஜை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in