புதுவை ஜிப்மர் கல்லூரியில் கடந்த 6 ஆண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இருந்து 332 பேர் விலகல்

230 பேர் மனநல ஆலோசனை பெற்றதாக ஆர்டிஐ மூலம் தகவல்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
Updated on
2 min read

புதுச்சேரி: பல பிரச்​சினை​களால் கடந்த 6 ஆண்​டு​களில் புதுச்​சேரி ஜிப்​மரில் முது​நிலை மருத்​து​வப்​படிப்​பு​களில் இருந்து 332 பேர் வில​கி​யுள்​ளனர். 230 பேர் மன நல ஆலோ​சனை பெற்​றுள்​ளதாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வக்​கல்​லூரி தேசிய அளவில் நான்​காம் இடத்​தி​ல் உள்​ளது. தேசிய அளவில் நடத்​தப்​படும் ஐஎன் ஐசிஇடி (INI CET ) தேர்​வில் வென்று இங்கு முது​நிலை மருத்​து​வம் பயிலச் சேரும் மாணவர்​கள் பல பிரச்​சினை​களை சந்​திக்​கின்​றனர். சிலர் படிப்​பு​களில் இருந்து வில​கி​யும், பலர் மனநல ஆலோ​சனை​யும் பெறும் நிலைக்கு தள்​ளப்​படு​வ​தாக பரபரப்பான புகார்கள் எழுந்​துள்​ளன.

இதுதொடர்​பாக புதுச்​சேரி மேட்​டுப்​பாளை​யம் சுவாமி​தாஸ் என்​பவர், தகவல் அறி​யும் உரிமைச்​சட்​டத்​தில் எழுப்​பிய கேள்வி​களுக்கு ஜிப்​மர் தகவல் அதி​காரி அளித்​துள்ள தகவல் விவரம்: கடந்த 2020-24 வரை பட்​டமேற்​படிப்​பில் 276 பேர் வில​கி​யுள்​ளனர். மனநல ஆலோ​சனை 200 பேர் பெற்​றுள்​ளனர். மனநல பாதிப்​புக்​காக 12 பேர் சிகிச்சை பெற்​றுள்​ளனர். இரு பட்​டமேற்​படிப்பு மாணவர்​கள் தற்​கொலை செய்​துள்​ளனர். தொடர்ந்து பல நாட்​களுக்கு பணி தரு​வ​தாக இரு புகார்​களும், சீனியர்​கள் துன்​புறுத்​தல் தொடர்​பாக இரு புகார்​களும் வந்​துள்ளன என்று தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல் கடந்த 2025-ல் விவே​கானந்​தன் என்​பவர் அனுப்​பிய கேள்வி​களுக்கு ஆர்​டிஐ​யில் ஜிப்​மர் அளித்த பதிலில், கடந்த 2025-ல் 56 பேர் படிப்​பிலிருந்து வில​கி​யுள்​ளனர். 30 பேர் மன நல ஆலோ​சனை பெற்​றுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி கடந்த 2020 முதல் 2025 வரை 332 பேர் படிப்​பிலிருந்து வில​கி​யுள்​ளனர். 230 பேர் மன நல ஆலோ​சனை பெற்​றுள்​ளனர் என்​பது உறு​தி​யாகிறது.

இதுபற்றி முது​நிலைமருத்​துவ மாணவர்​கள் தரப்​பில் விசா​ரித்​த​போது, "மூன்று மணி நேரம் மட்​டும் தூங்​கி​யும், ஒரு வேளை உணவு மட்​டுமே சாப்​பிட்​டும், வார விடு​முறை இல்​லாமல் நாளொன்​றுக்கு 21 மணி நேரம் பணி செய்​யும் நிலைக்கு தள்​ளப்​படு​கிறோம். பல சீனியர் மாணவர்​கள் தங்​கள் பணி​களை ஜூனியர் மாணவர்​கள் மேல் திணிப்​ப​தால் வேலை நேரம் நீள்​கிறது. சில சீனியர் மாணவர்​கள் அனை​வரின் முன்​னிலை​யில் ஜூனியர் மாணவர்​களை திட்​டும் சூழலும் நிகழ்​கிறது" என்​றனர்.

ஆர்​டிஐ தகவல் பெற்​றவர்​கள் மற்​றும் பெற்​றோர் தரப்​பில் விசா​ரித்​த​போது, "ஜிப்​மரில் முது​நிலைமருத்​து​வம் படிப்​போருக்​காக பெரும்​பாலான துறை​கள் உண்​மை​யான பணி நேரங்​கள் மற்​றும் வார விடு​முறை குறித்த எந்த பதிவை​யும் பராமரிக்கவில்​லை. மத்​திய அரசின் 1992-ம் ஆண்​டின் ரெசிடென்சி திட்ட விதி​முறை​கள், ஒரு நாளின் பணி நேரத்தை அதி​கப்​பட்​ச​மாக 12 மணி நேர​மாக​வும் வாராந்​திர பணி நேரத்தை 48 மணி நேர​மாக​வும் நிர்​ண​யித்​துள்​ளது.

ஜிப்​மரில் பயிற்சி மருத்​து​வர்​கள் அதி​கநேரம் பணி செய்ய வற்​புறுத்​தப்​படு​கின்​றனர். இருப்​பினும் மதிப்​பெண் அச்​சத்​தால் பணி நேரம் குறித்து நிர்​வாகத்​திடம் புகார் தர மறுக்​கின்​றனர். முது​நிலை மாணவர்களுக்கு பா​திப்பு அதி​கரிக்​கும் சூழலில், பாது​காப்​பான சூழலை உரு​வாக்​கித் தர வேண்​டும். இதுதொடர்​பாக ஜிப்​மர்​ நிர்​வாகம்​ விழித்​தெழ வேண்​டும்​" என்​றனர்​.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
“வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in