இஸ்​ரேல் - ஈரான் போர்: சென்​னை​யில் 2-வது நாளாக 33 விமானங்​களின் சேவை ரத்து

இஸ்​ரேல் - ஈரான் போர்: சென்​னை​யில் 2-வது நாளாக 33 விமானங்​களின் சேவை ரத்து
Updated on
1 min read

சென்னை: இஸ்​ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரு​வ​தால், மத்​திய கிழக்கு பகு​தி​களில் விமான சேவைகள் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

நேற்று முன்​தினம் சென்னை விமான நிலை​யத்​துக்கு துபாய், அபு​தாபி, பஹ்ரைன், மஸ்​கட் ஆகிய நாடு​களுக்கு இயக்​கப்​படும் 16 வருகை விமானங்​களும், புறப்​பாடு விமானங்​கள் 12 என, மொத்​தம் 28 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபு​தாபி, சார்​ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்​கட் உள்​ளிட்ட 17 புறப்​பாடு விமானங்​கள், இந்த நாடு​களில் இருந்து சென்​னைக்கு வரவேண்​டிய 16 வருகை விமானங்​கள் மொத்​தம் 33 விமானங்​கள் ரத்து செய்யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டன.

லண்​டன், அமெரிக்​கா, ஜெர்​மன் உள்​ளிட்ட நாடு​களில் இருந்து சென்னை வரும் பல்​வேறு விமானங்​கள் ஈரான், மத்​திய கிழக்கு நாடு​களின் வான்​வெளி​கள் மூடப்​பட்​டுள்​ள​தால், மாற்று பாதைகளில் விமானங்​கள் சுற்றி வந்து மீண்​டும் புறப்​பட்டு செல்​வதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்​படலாம் என்​ப​தால், அந்த விமானங்​கள் ரத்து செய்​யப்​பட​வும் வாய்ப்​புள்​ளது.

அதனால், பயணி​கள் தங்​களு​டைய விமான நிறு​வனத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிந்து கொள்​ளு​மாறு ​ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்​ரேல் - ஈரான் போர்: சென்​னை​யில் 2-வது நாளாக 33 விமானங்​களின் சேவை ரத்து
வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in