

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ். மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக மதுரை மாநகர கமிஷனராக உள்ள சஞ்சய் மாத்தூர் ஐ.பி.எஸ். திருச்சி கமிஷனராக நியமிக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.