குஷ்புவைக் கண்டித்து நீதிமன்றத்தில் மனு

குஷ்புவைக் கண்டித்து நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

இந்து தர்மத்தை அவமதித்ததாக நடிகை குஷ்பு மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

அண்மையில் வெளியான ஒரு வார இதழில், நடிகை குஷ்புவின் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் மாங்கல்யம் கோர்த்து அணிந்துள்ள வண்ணப் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இது, இந்து மக்களையும், இந்து தர்மத்தையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் உள்ளதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்டச் செயலர் கா.பாலா, கும்பகோணம் இரண்டாவது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வரும் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in