9 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 300 கிலோ தங்கம்: மும்பை உருக்காலைக்கு அனுப்பிவைப்பு

தங்க முதலீட்டுத் திட்டத்தில் சேமிக்கப்படுகிறது
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற தங்க நகைகளை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா உள்ளிட்டோர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற தங்க நகைகளை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா உள்ளிட்டோர்.

Updated on
1 min read

திருச்சி: தமிழகத்​தில் சமயபுரம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உட்பட 9 கோயில்களில் காணிக்கை​யாக வரப்பெற்ற 296.600 கிலோ தங்​கம், சமயபுரத்​தில் இருந்து மும்பை உருக்காலைக்கு நேற்று வங்கி மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது.

திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில், தஞ்​சாவூர் அரண்​மனை தேவஸ்​தானம், ஈச்​ச​னாரி விநாயகர் கோயில், பண்​ணாரி மாரி​யம்​மன் கோயில் உள்​ளிட்ட 9 கோயில்​களில் 296.

600 கிலோ தங்கம் பக்​தர்​கள் மூலம் காணிக்​கை​யாக வரப் பெற்​றன. இந்த தங்​கத்தை மும்​பை​யில் உள்ள மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுப் பத்​திரத்​தில் முதலீடு செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதையடுத்து இந்த தங்​கத்தை பொதுத்​துறை வங்​கி​யில் ஒப்​படைக்​கும் நிகழ்ச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் நேற்று நடை​பெற்​றது.

இதில், ஓய்​வு ​பெற்ற உச்ச நீதி​மன்ற மற்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள்துரை​சாமி ராஜு, ரவிச்​சந்​திரபாபு, ஆர்​.​மாலா ஆகியோர் முன்​னிலை​யில் வங்​கி​யின் திருச்சி மண்டல மேலா​ளர் எல்​.வேலப்​பனிடம், இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்பாபு ஒப்​படைத்தார்.

இந்து சமய அறநிலை​யத்துறை ஆணை​யர் பி.என்.தர், இணை ஆணை​யர்​கள் இரா.வான்​ம​தி, எஸ்​.​ஞான​சேகரன், எம்​.சூரிய​நா​ராயணன், வங்​கி​யின் மண்டல முதன்மை மேலா​ளர் பி.ரமேஷ், மண்டல துணைமேலா​ளர் எம்​.நவீன், சமயபுரம் கோயில் அறங்​காவலர் குழுத் தலை​வர் இளங்​கோவன் மற்​றும் பல்​வேறு கோயில்​களின் அறங்​காவலர் குழுத் தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

கோயில்களுக்கு வட்டித் தொகை

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்​சி​யில் 21 கோயில்​களில் காணிக்​கை​யாக வரப்பெற்ற பயன்​படுத்த இயலாத பொன் இனங்​களை உருக்கி கிடைக்​கப் பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் சுத்​தத்தங்​கக் கட்​டிகள், பொதுத் துறை வங்​கி ஒன்றின் தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் அந்​தந்த கோயில்​களின் பெயரில் தங்​கக் கட்​டிகளாக முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

இதன்​மூலம் ஆண்​டுக்கு கோயில்​களுக்கு ரூ.17.75 கோடி வட்​டித் தொகை கிடைக்​கிறது என இந்து சமய அறநிலை​யத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற தங்க நகைகளை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா உள்ளிட்டோர்.</p></div>
இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in