தண்டராம்பட்டு அருகே 3 பள்ளி மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை

தண்டராம்பட்டு அருகே 3 பள்ளி மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை
Updated on: 
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார்-ஜோதி. இவர்களது மகள்கள் மகாலட்சுமி(15), மகேஸ்வரி(14).

இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது தந்தையும், தாயும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர் வெளியூரில் உள்ளதால், மகாலட்சுமி, மகேஸ்வரி ஆகிய இருவரும் தண்டராம்பட்டு பஜனை கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் தேடி வந்துள்ளனர். அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே அசோக்குமாரின் உறவினரான தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - அனுசியா தம்பதியரும் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களது மகள் நித்யா(13), கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி தனது பாட்டி உண்ணாமலை பாதுகாப்பில் பள்ளியில் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நித்யா வீடு திரும்பாததால் அவரது உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை அறிந்த சிறுமிகளின் பெற்றோர் நேற்று தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன 3 மாணவிகளை தேடி வருகின்றனர்.

தண்டராம்பட்டு அருகே 3 பள்ளி மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை
நெருங்கும் ‘அர்னாப்’ புயல் - ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் அதிகனமழை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in