Published : 21 Jan 2015 08:08 AM
Last Updated : 21 Jan 2015 08:08 AM

ஸ்ரீரங்கத்தில் போட்டியிட தேமுதிக முடிவு: பாஜக தயக்கம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளரை அறிவிக்க தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வந்த பாஜக, தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கி தேமுதிகவை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப் படுகிறது. மாநிலத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதியுடன் முடி கிறது. இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டி வந்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிகவும் வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக தேமுதிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பாஜக ஊழலை எதிர்த்து பேசி வருகிறது. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி யுள்ளார். கூட்டணி தர்மத்தை மதிக்காமல், ஜெயலலிதாவை ஜேட்லி சந்தித்தது எங்கள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில்தான் ரங்கம் இடைத்தேர்தலுக்கு தேமுதிக சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர் பகுதிகளில் தேமுதிகவுக்கு குறிப் பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதனால்தான் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் பார்த்தசாரதியை திருச்சிக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்.

தேமுதிக சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்காக மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜ் உட்பட 6 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலும் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திமுக, அதிமுக சார்பில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேட் பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள னர். தேமுதிகவில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடக்கிறது என்றனர்.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகி களிடம் கேட்ட போது, ‘‘இடைத் தேர்தலில் பணபலம்தான் பெரிய அளவில் வேலை செய்யும். இன்றைக் கும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஸ்ரீரங்கத்தில் இருந்து வார்டு வாரியாக தேர்தல் பணி செய்து வருகின்றனர். இது எங்களை யோசிக்க வைத் துள்ளது. டெல்லியிலும் தேர்தல் நடப்பதால் தமிழக பாஜக தலைவர் கள் அங்கு சென்று தமிழர் பகுதி களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதனால், ரங்கத்தில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது, ‘‘எங்கள் கூட்டணிக் கட்சி தலைவர் களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். ஓரிரு நாளில் அவர்களை சந்திப்பேன். அதன்பிறகு எங்களது முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x