தமிழக சாலை மேம்பாட்டு நிதியில் முறைகேடு: ஈ.வி.கே.எஸ் புகார்

தமிழக சாலை மேம்பாட்டு நிதியில் முறைகேடு: ஈ.வி.கே.எஸ் புகார்
Updated on
1 min read

தமிழக சாலை மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 2000 கோடியில் முறைகேடு நடந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

''தமிழக சாலை மேம்பாட்டுக்கு மத்திய ஊரக அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட 2000 கோடியில் முறைகேடு நடந்துள்ளது .

இதில் அரசியல்வாதிக்கு 23.5% கமிஷன் சென்றுள்ளது. முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது'' என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in