

முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை ரத்து செய்திருப்பதை அடுத்து, எம்.ஏ.எம். தனது சொத்துகள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் முழு பொறுப்பையும் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா வசம் ஒப்படைக்க இருக்கிறார்.
முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை ரத்து செய்துவிட்டதாக எம்.ஏ.எம். மற்றும் இளையாற்றங் குடி கோயில் பட்டிணசாமி பிரிவு நகரத்தார் தர்மபரிபாலன சபை செயலாளர் வீரப்பச் செட்டி யார் ஆகியோர் கடிதங்கள் கொடுத் தனர். இதனடிப்படையில் இளையாற் றங்குடி கைலாசநாதர் கோயில் தேவஸ்தான குழு, முத்தையாவை பட்டிணசாமி பிரிவு புள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாக கடந்த 5-ம் தேதி முறைப்படி அறிவித்தது.
திருமணத்தின்போது மணமகன், மணமகள் சம்பந்தப்பட்ட கோயில் களில் இருந்து கோயில் மாலை அனுப்பப்பட்டால்தான் அந்த திரு மணம் முறைப்படி அங்கீகரிக்கப் பட்டு அவர்கள் புள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்போது, முத்தையாவை புள்ளி யிலிருந்து நீக்கிவிட்டதால், கோயில் மாலைக்காக அன்றைய தேதியில் எம்.ஏ.எம். தரப்பில் செலுத்தப்பட்ட பாக்குப் பணம் 25 ரூபாயை கடந்த 9-ம் தேதி எம்.ஏ.எம். வசம் முறைப்படி திருப்பிப் கொடுத்திருக் கிறது கைலாச நாதர் கோயில் தேவஸ்தான குழு.
இதையடுத்து, புதுத்தெம்பு பெற்றிருக்கும் எம்.ஏ.எம். அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார். செட்டிநாடு அரண்மனை சம்பந்தப்பட்ட சொத்துகள், நிறுவனங்கள் சுமார் 70 சதவீதம் தற்போது முத்தையா வசம் உள்ளன. எஞ்சிய 30 சதவீதம் எம்.ஏ.எம். வசம் உள்ளன. நிதிப் புழக்கம் உள்ள 6 முக்கிய அறக்கட்டளைகளும் தற்போது எம்.ஏ.எம்-மின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகச் சொல்லப் படுகிறது. அறக்கட்டளைகளில் தனது பிடிமானத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தனது சித்தப்பா மகனும் தொழிலதிபருமான ஏ.சி.முத்தையாவை முக்கிய அறக்கட்டளை ஒன்றில் அறங் காவலராகச் சேர்த்திருக்கிறார் எம்.ஏ.எம்.
இதுகுறித்து எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டபோது, “மன நிம்மதியை தொலைத்துவிட்டு இக்கட்டான நிலையில் இருந்த போது சகோதரர் ஏ.சி.முத்தையாதான் எனக்கு உறுதுணையாக வந்தார். இதை மற்றவர்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று சொன்னவர், “ஏ.சி.முத்தையா வசம் சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க இருப் பது உண்மைதான்’’ என்றும் சொன்னார்.