வெளிநாட்டில் வேலை என அழைத்து செல்லப்பட்டு சைபர் மோசடிக்காக கடத்தப்பட்ட 29 தமிழர்கள் மீட்பு

வெளிநாட்டில் வேலை என அழைத்து செல்லப்பட்டு சைபர் மோசடிக்காக கடத்தப்பட்ட 29 தமிழர்கள் மீட்பு

Published on

சென்னை: வெளி​நாட்​டில் அதிக சம்​பளத்​தில் வேலை என அழைத்​துச் செல்​லப்​படும் தமிழர்​கள், வேறு நாடு​களுக்கு சைபர் க்ரைம் மோசடி கும்​பலால் கடத்​திச் செல்​லப்​பட்டு அங்கு சைபர் மோசடி செய்ய பயன்​படுத்​தப்​பட்​டனர்.

இதை அறிந்த தமிழக சைபர் க்ரைம் போலீ​ஸார் கடத்​தப்​பட்​ட​வர்​களை மீட்க ‘ஆபரேஷன் ப்ளு ட்ரை​யாங்​கிள்’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை மேற்​கொண்​டனர்.

இதில் சென்னை உட்பட பல்​வேறு மாவட்​டங்​களி​லிருந்து வெளி​நாட்​டில் வேலை எனக்​கூறி பாங்​காக் அழைத்​து செல்​லப்​பட்​ட​வர்​கள், அங்கு துப்​பாக்கி முனை​யில் மிரட்டி சட்ட விரோத​மாக தாய்​லாந்து எல்லை வழி​யாக சீனா மற்​றும் மியான்​மர் சைபர் மோசடி கும்​பலிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

அக்​கும்​பல் அவர்களை தாக்கி சிறை வைத்தது. அதோடு சைபர் மோசடிகளில் ஈடுபட பயிற்​சி​யளித்து அவர்​கள் மூலம் கோடிக்​கணக்​கான பணத்தை சுருட்டி உள்​ளது. இக்​கும்​பலிட​மிருந்து இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த 465 பேர் மீட்​கப்​பட்டு இந்​தியா அழைத்து வரப்​பட்​டனர். இதன் தொடர்ச்​சி​யாக 2-வது கட்​ட​மாக 395 பேர் அழைத்து வரப்​பட்​டனர். இவர்​களில் 29 பேர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்​.

வெளிநாட்டில் வேலை என அழைத்து செல்லப்பட்டு சைபர் மோசடிக்காக கடத்தப்பட்ட 29 தமிழர்கள் மீட்பு
இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in