இலங்கையில் சிக்கிய 29 பேர் சென்னை வருகை

இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

Updated on
1 min read

சென்னை: சென்னை சேர்ந்த 14 பெண்​கள், குழந்​தைகள் உட்பட 29 பேர் கடந்த நவம்​பர் 25 ம் தேதி 6 நாட்​கள் சுற்​றுலா​வாக சென்​னை​யில் இருந்து ஸ்ரீலங்​கன் ஏர்​லைன்ஸ் விமானத்​தில் இலங்கை சென்​றனர்.

இலங்கை​யில் மழை, வெள்​ளம், நிலச்​சரிவு இருந்​த​தால், 29 பேரும் தங்​கள் பயணத்தை பாதி​யில் முடித்​து​விட்டு விமானம் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்​தனர்.

ஆனால் விமான சேவை​கள் அனைத்​தும் ரத்து செய்​யப்​பட்டு விட்​ட​தால், இலங்கை​யிலேயே ஒரு கிராம பகு​தி​யில் தங்​கினர்.

இதுபற்றி தகவல் அறிந்​ததும், தமிழக முதல்​வர் நடவடிக்கை எடுத்​ததன் மூலம், இலங்கை​யில் உள்​ள இந்திய தூதரக அதி​காரி​கள் மற்​றும் இலங்​கை​யின் முன்​னாள் கவர்​னர் செந்​தில் தொண்​டை​மான் உடனடி​யாக பாதிக்​கப்​பட்ட தமிழர்​களுக்கு உதவி​களை செய்​தனர்.

அவர்​கள் பாது​காப்​பாக சென்னை திரும்​புவதற்கு நடவடிக்கை எடுத்​தனர். இந்​நிலை​யில், நேற்று இலங்கையில் இருந்து ஸ்ரீலங்​கன் ஏர்​லைன்ஸ் விமானத்​தில் 29 பேரும் சென்னை திரும்​பினர்.

விமான நிலை​யத்​தில் அவர்​கள், இலங்கை​யில் சிக்கி தவித்த எங்​களை பத்​திர​மாக மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்​வருக்கு நன்​றியை தெரி​வித்து கொள்கிறோம் என்​றனர்​.

<div class="paragraphs"><p>இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.</p></div>
கத்திமுனையில் ரூ.15 லட்சம் கேட்டு தொழில் அதிபரை கடத்திய 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in