

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சர்வதேச அளவிலான பலூன் திருவிழா பொள்ளாச்சியில் கோலாகலமாக தொடங்கியது.
வெப்பக் காற்றழுத்தம் மூலம் இயங்கும் ராட்சத பலூன்களை பறக்கவிட்டு, அதில் பயணிக்கும் பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் வழிகாட்டுதலின்படி, இது தென்னிந்திய அளவில் நடத்தப்படும் முதல் சர்வதேச பலூன் திருவிழா. பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மைதானத்தில் இந்த பலூன் திருவிழா வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், சர்வதேச அளவில் அமெரிக்கா, சுலேவோக்யா, நெதர்லாந்து, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பலூன் ஓட்டிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சுற்றுலாத்துறையின் வழிகாட்டுதலின் படி, வெப்பக் காற்றழுத்த பலூன் துறையில் அனுபவம் பெற்ற குளோபல் மீடியா பாக்ஸ், கேம்ப்பிங் ரெட்ரீட்ஸ் ஆப் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த பலூன் திருவிழாவை நடத்துகின்றன.
நேற்று நடைபெற்ற பலூன் திருவிழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் ஹர் சகாய் மீனா, கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் கூறுகையில், சுற்று லாத் துறையின் யோசனைப்படி யும், காலநிலையின் அடிப்படை யிலும் பலூன் திருவிழாவை நடத்த பொள்ளாச்சி தேர்வு செய்யப்பட் டது. 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த குழு பலூன் திருவிழாவை நடத்தியுள்ளது. இதில் ஏழு பலூன்கள் பங்கேற்றுள்ளன என்றார்.