ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்: தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்: தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் ஜெ.சவான் நியமனம் உட்பட 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தலைமைச் செயலர் மு.சாய்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உயர்கல்வித்துறை சிறப்பு செயலராகவும், அறிவியல் நகர துணைத்தலைவர் ஹர் சகாய் மீனா, நில சீர்திருத்த ஆணையராகவும், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநர், அஜய் யாதவ், பால் உற்பத்தித்துறை ஆணையர் மற்றும், ஆவின் மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர், தமிழ்நாடு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.விஜயாராணி, தோட்டக் கலைத்துறை இயக்குநராகவும், இப்பதவியில் இருந்த பி.குமரவேல்பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராகவும், அரியலூர் முன்னாள் ஆட்சியர் பி.ரத்தினசாமி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும், திருநெல்வேலி முன்னாள் ஆட்சியர் ஆர்.சுகுமார், எழுதுபொருள் அச்சகத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவின் மேலாண் இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி இயக்குநராக இருந்த ஏ.ஜான் லூயிஸ், தமிழ்நாடு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநராகவும், சர்க்கரைத்துறை முன்னாள் இயக்குநர் டி.அன்பழகன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை முன்னாள் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண் இயக்குநராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இருந்த எஸ்.விசாகன், அறிவியல் நகர துணைத் தலைவராகவும், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஆர்.அனாமிகா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஞ்ஜித் சிங், தென்காசி ஆட்சியராகவும், நாமக்கல் முன்னாள் ஆட்சியர் துர்கா மூர்த்தி, திண்டுக்கல் ஆட்சியராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், ஆளுநரின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.சரவணன், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு இணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிப்பிரிவு துணை ஆணையர் எம்.பிரதிவிராஜ், கரூர் மாநகராட்சி ஆணையராகவும், எல்காட் செயல் இயக்குநர் வி.தீபனவிஷ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

மேலும், சிதம்பரம் சார் ஆட்சியர் எஸ்.கிஷன்குமார், கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் என தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்: தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற வந்தபோது பழனிசாமி, வேலுமணி ஆதரவாளர்கள் கைகலப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in