முகவரி இல்லாதவர் மு.க.ஸ்டாலின்: சென்னையில் மு.க.அழகிரி பேட்டி
முகவரி இல்லாதவர் ஸ்டாலின் என்று முன்னாள் மத்திய அமைச் சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
திமுக பொருளாளர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்யப்போவதாக நேற்று தகவல் பரவியது. இதை யடுத்து கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு நேற்று தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டி:
ஸ்டாலின் ராஜினாமா செய்யப் போவதாக செய்தி வந்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அதுபற்றி எனக்குத் தெரியாது. முகவரி இல்லாதவர்கள் பற்றி, நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
திமுகவில் மீண்டும் இணைவீர்களா?
அப்படி எதுவும் சொல்ல வில்லையே.
திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால்?
திமுக திருந்தினால் நான் மீண்டும் சேரலாம்.
திமுக எப்படி திருந்த வேண்டும் அல்லது மாற வேண்டும் என நினைக் கிறீர்கள்?
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.
திருடன் என்று யாரைச் சொல்கிறீர்கள்?
உங்களுக்குதான் தெரியுமே. நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.
யாருடைய பெயரையாவது குறிப்பிட்டுச் சொல்லுங்கள்?
நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்தார்.
