தமிழகத்துக்கு வினாடிக்கு 27,000 கன அடி நீர் திறப்பு: முழு கொள்ளளவை நெருங்கிய கபினி, ஹாரங்கி அணைகள்

101 அடியை கடந்த கிருஷ்ண ராஜசாகர் அணை
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை கனமழை காரணமாக அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று அங்கிருந்து  மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்  காட்சி. படம்: பிடிஐ

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை கனமழை காரணமாக அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று அங்கிருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும் காட்சி. படம்: பிடிஐ

Updated on
2 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்​து​வ​ரு​வ​தால் கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணை​களும் முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளன. இதனால் அணை​களின் பாது​காப்பை கருதி தமி​ழ​கத்​துக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி, வீராஜ்பேட்​டை, சோம​வார் பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் கடந்த 4 நாட்​களாக இரவு பகலாக கனமழை பெய்து வரு​கிறது.

குடகு மாவட்​டம் முழு​வதும் கொட்​டித் தீர்க்​கும் கனமழை​யால் காவிரி ஆற்​றி​லும், அதன் துணை ஆறுகளி​லும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. நேற்று குடகு மாவட்​டத்​தில் உள்ள மடிகேரி​யில் 104.5 மிமீ மழை பதி​வானது.

தலக்​கா​விரியை சுற்​றி​யுள்ள பகு​தி​யில் பெய்​து​வ​ரும் கனமழை​யால் காவிரி ஆறும் கன்​னிகா ஆறும் இணை​யும் திரி​வேணி சங்​கமத்​தில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. அங்​குள்ள கோயில்​கள், மேம்​பாலங்​கள், தடுப்​பணை​கள் மூழ்​கி​யுள்​ளன. இதனால் தலக்​கா​விரி மடிகேரி இடையே​யான போக்​கு​வரத்து முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

காவிரி​யின் முக்​கிய துணை ஆறு, கபினி உற்​பத்​தி​யாகும் கேரள மாநிலம் வயநாட்​டிலும் கடந்த 4 நாட்​களாக கன‌மழை பெய்து வரு​கிறது. இதனால் கபினி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால், மைசூரு​வில் உள்ள கபினி அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. எனவே கபினி அணை​யின் நீர்​மட்​டம் கிடு​கிடு​வென உயர்ந்​து, முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளது.

இதே​போல ஹாசன், சிக்​கமகளூரு ஆகிய மாவட்​டங்​களில் பெய்​து​வ​ரும் கனமழை காரண​மாக ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று இரவு 7 மணி நில​வரப்​படி, கபினி அணை​யின் மொத்த உயர​மான 2284 அடி​யில் 2282.60 அடி வரை நீர்​மட்​டம் உயர்ந்​துள்​ளது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 820 கன அடி நீர் வந்​து​கொண்​டிருக்​கும் நிலை​யில், அணை​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 27 ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

கபினி அணை​யில் இருந்து அதி​கள​வில் நீர் திறக்​கப்​பட்​டுள்​ள‌​தால் காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் கரையோர கிராம மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. மண்​டி​யா​வில் உள்ள கிருஷ்ண​ராஜ​சாகர் அணைக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 124 கனஅடி நீர் வந்​து​கொண்​டிருப்​ப​தால் அணை​யின் நீர்​மட்​டம் 101.30 அடி​யாக (மொத்த அடி 124.80) உயர்ந்​திருக்​கிறது. கபினி, ஹாராங்கி ஆகிய இரு அணை​களும் முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளன. இன்​னும் ஓரிரு நாளில் இரு அணை​களும் முழு கொள்​ளளவை எட்​டும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேகேதாட்டு அணையை எதிர்த்து புதிய மனு

மேகேதாட்டு அணைத் திட்டம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ, உத்தரவையோ பிறப்பிக்க கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி படுகை என்பது ஒரு பற்றாக்குறை படுகையாக இருப்பதால் சிறிய அளவிலான நீர் திட்டங்களுக்கு கூட காவிரி நதிநீர் தீர்ப்பாயம் முன்பு அனுமதி வழங்கவில்லை. கர்நாடகா சிறிய நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி கோரிய போது முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

புதிய திட்டங்களை செயல்படுத்த மதிப்பிடுவது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் செயல். அது கீழ்ப் பாசன மாநிலங்களைப் பாதிக்கும்.

காவிரி நீர் விவகாரத்தில் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காவிரியில் புதிய நீர் திட்டங்களை ஆய்வு செய்வது, அனுமதி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை கனமழை காரணமாக அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று அங்கிருந்து  மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்  காட்சி. படம்: பிடிஐ</p></div>
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in