சென்னை டிரேட் சென்டரில் ஜம்போ தள்ளுபடி கண்காட்சி: நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது

சென்னை டிரேட் சென்டரில் ஜம்போ தள்ளுபடி கண்காட்சி: நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது
Updated on
1 min read

ஜம்போ தள்ளுபடி கண்காட்சி 2014 நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் நாளை முதல் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. ஐ ஆட்ஸ் அண்டு ஈவன்ட்ஸ் நிறுவனம் இக்கண்காட்சியை நடத்துகிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து, அவற்றை மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு விற்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இங்கு விற்கப்படும் பொருட்களுக்கு 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஃபர்னீச்சர்கள், கலை பொருட்கள், சமையலறை பொருட்கள், மாடுலர் கிச்சன், திரை சீலைகள், அலங்கார மலர்கள், தரை விரிப்புகள், ஜுவல்லரி உள்ளிட்டவற்றை இக்கண்காட்சியில் வாங்கலாம்.

வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லான்சன் டொயோட்டா, கே-லைட் ஆகிய நிறுவனங்கள் துணை ஸ்பான்சரர்களாக செயல்படுகின் றனர். மொத்தம் 140 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in