

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வழக்க மாக அறிவிக்கும் கோடை சிறப்பு சுற்றுலா பயணத் திட்டங்கள் மக்களவை தேர்தல் காரணமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தன. தற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு கோடை சிறப்பு பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா சீசன் களை கட்டும். அப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பெரு வாரியான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு ஊட்டி, கொடைக் கானல், ஏற்காடு என்று சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுப் பார்கள். அப்போது தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் கோடை சிறப்பு சுற்றுலா திட்டங்களை அறிவிக்கும். தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வசூ லிக்கும் கட்டணத்தை விட தமிழ்நாடு சுற்றுலாத்துறை வசூலிக்கும் கட்டணம் குறைவாகவே இருக்கும் என்பதால் நடுத்தர மக்கள் பலர் தமிழ்நாடு சுற்றுலாத் துறையை நாடி வருவார்கள்.
ஆனால் இந்த முறை ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்ததால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை எந்த கோடை சுற்றுலா திட்டங்களையும் அறிவிக்கவில்லை.
தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பல்வேறு சிறப்பு சுற்றுலாக்களை அறிவித்துள்ளது.
அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொச்சி, மைசூர், பெங்களூரு என்று பல்வேறு இடங் களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை கோடை சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது . இந்த ஊர்களுக்கு சுற்றுலா செல்ல 10 பேருக்கு அதிக மாக விண்ணப்பித்தால் அவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி செய்யப் படும். அதே போல் மூத்த குடிமக் களுக்கு 20% கட்டணம் குறைத்துக் கொள்ளப்படும்.
இது தொடர்பாக சுற்றுலாத் துறை யின் மூத்த அதிகாரி கூறியதாவது:
இந்த முறை ஊட்டி, கொடைக் கானல், மூணாறு, பெங்களூரு போன்ற இடங்களுக்கான கோடை சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளோம். ஏப்ரல் 26 முதல் 29-ம் தேதி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து ஊட்டி, கொடைக் கானல் போன்ற இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்கள்.
சென்னையிலிருந்து ஊட்டிக்கு சென்று 2 பகல், ஒரு இரவு தங்கும் பயண திட்டத்தில் தங்குமிடத்துக்கு ஏற்ப ரூ.3,700 முதல் ரூ.4,600 வரை வசூலிக்கப்படும். கொடைக் கானலுக்கு ரூ.3,950 முதல் ரூ.4,500 வரையும், மூணாறு செல்ல ரூ.3,050 முதல் ரூ.3,500 வரையும், பெங்களூரு செல்ல ரூ.2,950 முதல் ரூ.3,600 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதில் குழந்தைகளுக்கு சலுகையுண்டு. இந்த கட்டணங்கள், பேருந்து, தங்குமிடம், உணவு என அனைத்திற்குமானதாகும்.
வார இறுதி நாட்களில் மட்டும் வழங்கப்படும் இந்த சுற்றுலாக்கள் பொதுமக்கள் அதிகளவில் வருகிற போது வார நாட்களிலும் வழங்கப்படும். அதற்கான கட்டண சலுகைகளும் உண்டு. மேலும் தமிழ்நாடு சுற்று லாத்துறை வசூலிக்கும் இந்தக் கட்டணங்கள் தனியார் சுற்றுலா நிறுவனங்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.